• Apr 07 2026

விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு என்ன குழந்தை பிறந்தது தெரியுமா.? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாடகர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் தனது தனித்துவமான குரல் மற்றும் அரிதான திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். 

இந்த நிகழ்ச்சியில் உதித்து நாராயணனைப் போல தத்துரூபமாக  பாடல்களைப் பாடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ வைத்தவர். மேலும் இவர் பின்னணி பாடகராகவும், மெலோடி பாடல்கள் மற்றும் லைவ் பெர்ஃபார்மன்ஸ்களிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாக்கியுள்ளார்.  

இந்த நிலையில்,   பாடகர் அஜய் கிருஷ்ணா  இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆகியுள்ளார். . இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததில், “Our family just got a little bigger, a little louder, and a lot more beautiful. Blessed with a baby... Thank you God for this beautiful gift.” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


அஜய் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததன் மூலம் அவர்களின் குடும்பம் முழுமையான மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் அவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement