கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் டாஸ்கிக். இந்த திரைப்படம் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இந்த படத்தில் யாஷுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் டாஸ்கிக் வீடியோவின் முதலாவது கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கேங்ஸ்டர் லுக்கில் காட்சி அளித்துள்ளார் யாஷ்.
குறித்த கிளிம்ஸில் நடிகர் யாஷ் பப்பிற்கு சென்று அவர் அழகிகளுடன் ஆட்டம் போட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்திலும் கேங்ஸ்டர் லுக்கா? இதை பார்த்தால் கேஜிஎப் வாடை அடிக்குதே.. அத்துடன் இந்த கிளிம்ஸ் perfume அட் போல இருப்பதாகவும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
மேலும் குறித்த கிளிப்ஸை பார்க்கும் போது நடிகர் யாஷ் வில்லன் ரேஞ்சுக்கு இருப்பதாகவும் ரசிகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது யாசின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாஸ்கிக் கிலிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!