• Dec 25 2024

கிரிக்கெட் மைதானத்தில் ‘நீயா நானா’: கோபிநாத் எடுக்கும் புதிய அவதாரம்..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோ முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கோபிநாத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது

'நீயா நானா' நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகாலம் தொகுத்து வழங்கிவரும் ஆங்கர் என்ற பெருமையும் கோபிநாத்துக்கு உரியது.


இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2024 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக உள்ள ஐபிஎல் போட்டியில் புதிய தொகுப்பாளராக இணைந்துள்ளார் கோபிநாத்.


2024 ஐபிஎல் தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ண நிலையாளர்கள் குழுவில் நீயா நானா கோபிநாத் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement