• Dec 25 2024

ஆண்கள் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்துட்டன்.. என் மகன் ஸ்ரீஹரி என்கிட்ட வந்தாலும்..! வனிதா எமோஷனல்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜயகுமார். இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளை கடந்து சினிமா துறையில் நடித்து வருகின்றதாம்.

நடிகர் விஜயகுமாரின் குடும்பம் மிகவும் பந்த பாசத்தால் கட்டி அணைக்கப்பட்ட குடும்பம். இதனை நிகழ்ச்சிகள், பேட்டிகள், அண்மையில் நடந்த திருமண விழா போன்றவற்றில் நாம் அவதானித்திருப்போம்.

ஆனால் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா விஜயகுமார் இன்று வரை அவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு நபராகவே காணப்படுகிறார். அதற்கு காரணம் அவர் மட்டுமே..

ஆனாலும் மீண்டும் தனது குடும்பத்துடன் வனிதா சேர நினைத்தாலும் அவர்களுக்கு அந்த எண்ணம் அறவே இல்லை என்பது வனிதாவுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால் தற்போது தனது மகள்களுடன் தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்திச் செல்கிறார்.


இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார். அதன்படி அவர் என்ன கூறிய உள்ளார் என விரிவாக பார்ப்போம்.

விஜயகுமாருடைய பேத்தியும் அனிதாவுடைய மகளுமான தியாவுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் அந்த  திருமணத்தில் வனிதா கலந்து கொள்ளவில்லை. அவர்களை இன்வைட் பண்ணல அப்படி என்பது போல காரணம்  சொல்லி உள்ளார் வனிதா. 

வனிதா இந்த திருமணத்தில் கலந்துக்கல அப்படி என்றாலும்  அவங்களோட மகன் ஸ்ரீஹரி திருமணத்தில் கலந்துகொண்டு டான்ஸ் எல்லாம் அடி சூப்பரா செலிப்ரேட் பண்ணி இருந்தார்.


இந்த நிலையில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு யாராவது ஒருத்தர் தான் சூஸ் பண்ணனும் அப்படின்னு வாய்ப்பு இருந்தா உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா? அல்லது உங்களோட மகனை தேர்ந்தெடுப்பீங்களா? அப்படின்னு கேள்வி கேட்க,  யாரு என்னை  தேர்ந்தெடுக்குறாங்களோ அவங்கள தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்கள் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போயிட்டன். அது எல்லாமே போதும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீஹரி அண்ணாவ உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் மறுபடியும் திரும்ப உங்ககிட்ட வருவாரா? அப்படின்னு கேள்வி கேட்க, நீங்க யாரையாவது உண்மையா நேசிச்சா அது அப்படியே ஃப்ரீயா விட்டுடுங்க அது உங்களை தேடி வந்தா அது உங்களோடது. உங்களுக்கு சொந்தமானது. அப்படி இல்லன்னா எப்பவுமே அது உங்களோடது கிடையாது என்று சொல்லி உள்ளார்.


மேலும் தன்னோட செகண்ட் டாட்டர் டென்த் படிக்கிறாங்க. தானும் தன்னோட மகள்களும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கோம் என்றும், ஜோவிகா தன்னோட கோலநோக்கி முன்னேறி போயிட்டே இருக்கா. தன்னைத்தானே தகுதி படுத்திட்டு இருக்கா. எல்லாம் கூடி வரும் போது ஜோவிகா படத்துல கண்டிப்பா நடிப்பா என்றும் சொல்லியுள்ளார்.

ஆனாலும் ஜோவிகா பிக்பாஸ் கொண்டாட்டத்துக்கு வரமாட்டாங்க. உங்களோட பிளசிங் கிடைக்கிறதுக்கு பிக் பாஸ் ஒரு பிளாட்பார்ம் தான். அது முடிஞ்சு போச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பத்தின கேள்விக்கு தளபதி விஜய் சொன்ன மாதிரி இக்னோர் நெகட்டிவிட்டி அப்படின்னு வனிதா பதில் சொல்லி உள்ளார்.

Advertisement

Advertisement