• Dec 26 2024

யாரும் அவசப்பட்டு கல்யாணம் பண்ணாதைங்க..! பிக் பாஸ் விசித்ராவின் வன்மத்தால் கதறியழுத ரச்சிதா!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த தினேஷ், தற்போது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக காணப்படுகிறார்.

எனினும், தன்னுடைய காதல் மனைவி ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.அவர்கள் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.


தனது வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்களை தினேஷ் அடிக்கடி சோகமாக பிக் பாஸ் ஷோவில் பேசி வருகிறார்.

ஆனால் வெளியில் இருக்கும் ரச்சிதா மஹாலக்ஷ்மி தான் அனுபவித்த வலி எனக்கு தான் தெரியும் என தொடர்ந்து பதில் கொடுத்த வருகிறார். 

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தினேஷின் பர்சனல் வாழ்க்கை பற்றி மோசமாக பேசிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரச்சிதா. 


அதன்படி அவர் கூறுகையில், இது தான் வாழ்கை என்று ஆகிடுச்சு. இத வைச்சி விமர்சனம் செய்றது எனக்கு பிடிக்காது. எனக்கு இன்டர்வியூ கொடுக்கவும் பிடிக்காது.நிறைய பேருக்கு இது தெரியும்.

உங்க லைஃப்ப நீங்க தெரிவு செய்யும் போது ரொம்ப யோசிச்சு முடிவு எடுங்க. யாரையும் அதுல நுழைய விடாதைங்க. அவசரப்பட்டு கல்யாணம் பண்ணவும் வேணாம். ஒரு கண்ணாடி உடைஞ்சா அதுல தெரிய விம்பம், அந்த உணர்வை சொல்ல தெரியல...எனக்கு என்ன சொல்லுறது என்றே தெரியல என ரொம்பவும் நொந்து கவலையா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ரச்சிதாவுக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement