• May 22 2026

கமல் இப்படிச் சொல்வார் என யாருமே நினைக்கல… ‘கருப்பு’ பிரச்சனைக்குப் பிறகு வைரலான பதிவு.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த சில நாட்களாகவே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது. மே 14ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தடைப்பட்டது. 


இந்த திடீர் பிரச்சனை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக படம் வெளியாகாததால் இயக்குனர் RJ பாலாஜி கண்கலங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. பல திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகள் வெளியிட்டனர்.

இதற்கிடையில், தயாரிப்புக் குழுவும் பைனான்சியர்களும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததால் அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டன. இதையடுத்து இன்று காலை ‘கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படத்தை வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, தயாரிப்பாளர்கள், சூர்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார். கமலின் இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement