• May 22 2026

ஒரு குழந்தையை இழந்த நான்… இன்னொரு குடும்பத்தை கெடுப்பேனா? மனமுடைந்து பேசிய கெனிஷா

shali / 6 days ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா குறித்து கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரவி மோகனின் விவாகரத்துக்கு காரணமே கெனிஷா தான் என்ற குற்றச்சாட்டுகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டன. இதனால் கடும் மனவேதனை அடைந்த கெனிஷா, தற்போது வெளியிட்டுள்ள நீண்ட வீடியோ மூலம் பல விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவில் கெனிஷா தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை மிகவும் உருக்கமாக பகிர்ந்துள்ளார். “2013ஆம் ஆண்டு என் அம்மாவையும், 2017ஆம் ஆண்டு அப்பாவையும் இழந்தேன். சிறுவயதிலேயே உறவினர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். 18 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால் அந்த வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக மாறியது. என் கணவரின் தாக்குதலால் வயிற்றில் இருந்த நான்கு மாத குழந்தையையே இழந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நான் பார்களில் பாடியவள் தான். அதில் என்ன தவறு? ஒரு இரவுக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கி கஷ்டப்பட்டு வாழ்ந்தேன். இன்று என்னைப் பற்றி தெரியாமல் பலரும் தவறாக பேசுகிறார்கள். எனக்கு பல குழந்தைகள் இருக்கிறது, நான் ஆண்டி, ரவி மோகனுடன் சுற்றுகிறேன் என்று எல்லாம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ரவி மோகனை பற்றி பேசும்போது, “அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் ஒரு தோழியாகவும், தெரபிஸ்டாகவும் சில ஆலோசனைகள் கூறினேன். அதனால் நாங்கள் நல்ல நண்பர்களானோம். ஒரு குழந்தையை இழந்த நான், இன்னொரு குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கெனிஷாவின் இந்த உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

Advertisement