• Oct 27 2026

நடிகைகளை யாரும் புரிந்துகொள்வதில்லை.. – மனம் திறந்த கீர்த்தி சனோன்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

திரையுலகில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருவருமே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், நடிகர்களுடன் ஒப்பிடும் போது நடிகைகளுக்குத்  தான் அதிகமான பிரச்சினைகளும் போராட்டங்களும் இருப்பதாக கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகைகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள் வெளி உலகத்திற்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திருமணம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற பொதுவான பார்வை திரையுலகில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் நடிகைகளின் தொழில் வாழ்க்கையைப் பாதிப்பதுடன், அவர்களின் திறமையை மதிப்பிடுவதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைகின்றன.

தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னோக்கிப் பயணிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். விமர்சனங்களைப் புறக்கணிப்பது பயத்தினால் அல்ல; தேவையற்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களுடைய இலக்கில் கவனம் செலுத்துவதற்காகவே என்றும் அவர் விளக்கியுள்ளார்.

நடிகைகள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கீர்த்தி சனோனின் இந்தக் கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. அவரது கருத்துக்கள் பெண்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சமூகத்தின் பார்வை குறித்த விவாதங்களையும் மீண்டும் முன்னெடுத்துள்ளன.


Advertisement

Advertisement