• Dec 26 2024

நிவாரணம் வேண்டாம்; உங்க கூட ஒரு செல்ஃபி போதும்! மக்களுடன் செம ஹாப்பியாக இருந்த தளபதி விஜய்! வைரல் போட்டோஸ் இதோ...

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நெல்லை உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தனது கையால் நிவாரண பொருட்களை வழங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய்.

அதன்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க, தனது விமானத்தில் நெல்லை சென்று அங்கு நல்லபடியாக அனைவருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளார்.


இந்த நிலையில், எனக்கு நிவாரண பொருட்கள் வேண்டாம், உங்களுடன் ஒரு செல்பி மட்டும் போதும் என ரசிகை ஒருவர் நடிகர் விஜயை  ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அதன்படி, குறித்த ரசிகை, விஜய்யின் காலில் விழுந்து வணங்கிய பின்னர், விஜய் நிவாரண பொருட்களை கொடுக்க முயன்றார். அவர் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற உடனே நிவாரண பொருட்களை அருகில் வைத்து விட்டு செல்ஃபி எடுத்துவிட்டு கிளம்ப, நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று விஜய் கேட்க , வேண்டாம் உங்களுடைய செல்பி எடுத்தால் மட்டும் போதும் என்று கூறி சென்றுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.


அதேவேளை, அங்கு நிவாரணம் வாங்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை விஜய் தனது கைகளால் தாங்கி தூக்கியுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

இவ்வாறு இன்றைய தினம், பெண்கள், தாய்மார்கள், ரசிகர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் விஜய்.


Advertisement

Advertisement