• Dec 25 2024

8 வருஷமாக இந்த ரகசியம் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் தான் தெரியும்- உண்மையை உடைத்த அட்லி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குநர் அட்லி. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று  வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின முக்கிய இயக்குநராக மாறினார்.

இதனால், பாலிவுட் வரை செல்லும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இதனால் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் 1100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஜவான் வெற்றிக்குப் பின்னர் அட்லி கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. 


அதில், அவரது வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது தனது வெற்றிக்கு முழு காரணமும் மனைவி பிரியா தான் என கூறியுள்ளார்.  உதவி இயக்குநராக இருக்கும் போதே ப்ரியாவை சந்தித்த அட்லி, தனது காதலை சொல்லாமல் 8 ஆண்டுகள் வரை காத்திருந்தாராம். ராஜா ராணி மூலம் இயக்குநராக அறிமுகமான பின்னரே ப்ரியாவிடம் காதலை சொல்லியுள்ளார் .


ஆனால், அவர் இதனை காமெடியாக எடுத்துக்கொள்ள, நேராக ப்ரியாவின் அம்மாவுக்கே போன் பண்ணி தனது காதல் குறித்து பேசியுள்ளார்.இறுதியாக இரு வீட்டாரும் சந்தித்து ஒன்றரை மாதத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர் என அட்லி கூறியுள்ளார். ஆனால், தான் ப்ரியாவை 8 ஆண்டுகளாக காதலித்த அந்த ரகசியம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரியும். 


விஜய் டிவியில் சிவாவை பார்ப்பதற்காக சென்ற இடத்தில் தான் ப்ரியாவை சந்தித்தேன். அதனால் அடிக்கடி ப்ரியாவை பார்ப்பதற்காக செல்வது போல, ப்ரியாவையும் பார்த்து வருவேன் என்று அட்லி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement