• Jan 13 2025

கம்முன்னு இருக்கும் சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா? வலுக்கும் எதிர்ப்புகள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஷ சாராயம் குடித்து 30 பேர் பலியான விவகாரம் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலேயே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜயையும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏனைய நடிகர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக அவர்களை விளாசி தள்ளி வருகிறார்கள்.


குறிப்பாக கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது எதுவும் அசம்பாவிதங்கள் நடந்தால் நடிகர் சூர்யா தவறாமல் குரல் கொடுத்து வந்தார். அதிலும் அதிமுகவின் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் பிரிந்து தர்ம யுத்தம் நடத்திய போது நம் மக்கள்தான் மிஸ்சர்  சாப்பிட்டு கொண்டு இருப்பது என சூர்யா பதிவிட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் அதனை ஷேர் செய்த நெட்டிசன்கள், மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் அல்ல அண்ணா நீங்கள் தான் என சூர்யாவை கலாய்த்து வருகின்றார்கள்.


அதேபோல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் சூர்யாவை விளாசித் தள்ளி வருகின்றார். இது தொடர்பில் தனது எக்ஸ தள  பக்கத்தில் மீம்ஸ் ஒன்றையும் ஷேர் பண்ணி உள்ளார்.

இவ்வாறு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடிகர் விஜய் மட்டுமே  நேரடியாக தனது கண்டனத்தை தெரிவித்த நிலையில், ஏனைய பிரபலங்கள் கம்முன்னு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement