விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக மக்கள் மனங்களைக் கவர்ந்தது ‘நீயா நானா’. வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட மக்களை ஒன்றுகூட வைத்து விவாதத்தின் மூலம் உண்மையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.
எனினும் சமீபத்திய எபிசொட்டில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. குறிப்பாக சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அந்நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.
அதாவது கடந்த வாரம் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர் தன்னுடைய வாழ்க்கைப் பின்னணியை மிகுந்த உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்திருந்தார். அதன்போது அந்தப் பங்கேற்பாளர் " சமூகத்தில் நசுக்கப்பட்டோம் என்று கூறியிருந்தார். இது ஒரு சமூகம் அனுபவித்த துன்பங்களின் வெளிப்பாடு. எனினும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பு முறையில் இந்த வார்த்தைகள் உண்மையில் சர்ச்சையை எழுப்பியுள்ளதாக பா. ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஞ்சித் மேலும் “நீயா நானா நிகழ்ச்சி அப்படியான கருத்துக்களை எடிட் செய்யாமல் போடுவது என்பது சமூக அக்கறையற்ற செயலாகும். ஒரு சமூகத்தின் வேதனைகளை இவ்வாறு வெளிக்காட்டுவது ஊடகமாக இருந்தாலும் பிழையான விடயம்.” எனவும் கூறியிருந்தார்.
பா.ரஞ்சித்தின் பதிவுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்படுகின்றது. பலரும் அவரது பார்வையை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் இதற்கான பதிலை இன்னும் வழங்கவில்லை. அவர்களிடம் இருந்து இதற்கான விளக்கம் வருமா..? என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Listen News!