• Apr 16 2025

இளையராஜாவின் பாடலைக் காப்பியடித்த" குட் பேட் அக்லி"..! நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இளைஞர்களின் ராஜா என அழைக்கப்படும் இளையராஜா, தற்பொழுது  மீண்டும் ஒரு பரபரப்பான சட்ட நடவடிக்கை காரணமாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளார். அவருடைய இசை பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த புனிதமான இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


‘குட் பேட் அக்லி’ திரைப்படம், சமீபத்தில் திரைக்கு வந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தில் சில பழைய பாடல்களின் இசை அமைப்புக்கள் புதுமையாகத் திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமாக , “ஒத்த ரூபாவும் தாரேன்…” மற்றும் “இளமை இதோ இதோ…” போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.


இந்த இரண்டு பாடல்களும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 80களின் திரையுலகத்தில் இவை ரசிகர்களை மகிழ்வித்ததுடன் இவை தற்போது “குட் பேட் அக்லி” படத்தில் மீண்டும் இணைத்திருப்பதனை இளையராஜா தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  ப்படத்தில் தனது பாட்டினை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாவினை நஷ்ட ஈடாக தருமாறு இளையராஜா தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்துள்ளன .

Advertisement

Advertisement