• Apr 08 2025

இனியாவை கலியாணத்திற்கு சம்மதிக்க வைக்கும் ஆகாஷ்..செல்வியிடம் மனம்விட்டுக் கதறிய பாக்கியா.!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியாவும் அமிர்தாவும் ரெஸ்டாரெண்டில ஒன்னா இருக்கிறத பாத்த செல்வி என்ன மாமியும் மருமகளும் இங்க இருக்கிறீங்க என்று கேக்கிறார். மேலும் அமிர்தாவப் பாத்து என்னாச்சு பாக்கியா அக்காக்கு என்று கேக்கிறார். அதுக்கு அமிர்தா வீட்டில நிறைய விஷயம் நடக்குது அதுதான் அம்மா ஜோசிச்சுக் கொண்டிருக்கிறா என்று சொல்லுறார்.இதனை அடுத்து செல்வி பாக்கியாவப் பாத்து வீட்டில என்ன நடக்குது என்று சொல்லு அப்ப தான் மனசுக்குள்ள இருக்கிற பாரம் குறையும் என்கிறார்.

அதுக்கு பாக்கியா நடக்கிறது எதுவுமே எனக்கு சரியாப்படல என்று சொல்லி அழுகுறார். மேலும் இனியா கலியாணம் வேணாம் என்று அவளா தூரம் சொல்லுறாள் ஆனா யாருமே கேக்கமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லுறார். அத்துடன் தனக்கும் இனியா கலியாணம் செய்றதில விருப்பம் இல்ல என்று சொல்லுறார். இதைக் கேட்ட செல்வி நீ ஏன் இனியாவுக்கு கலியாணம் வேணாம் என்று சொல்லுற என்கிறார்.


அதற்கு பாக்கியா கலியாணம் வேணாம் என்று சொல்லுறதுக்கு நிறைய காரணம் இருக்கு என்கிறார். மேலும் அவ நிறைய படிக்கணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து கோபியும் இனியாவும் ஆகாஷ் வீட்ட வந்து நிக்கிறார்கள். அப்ப இனியா கோபியப் பாத்து ஏன் இங்க கூட்டிக் கொண்டுவந்தனீங்க என்று கேக்கிறார். அதுக்கு கோபி தனக்கு அந்த பையன் மேல இருந்த கோபம் எல்லாம் இப்ப இல்ல என்று சொல்லுறார்.

அதைத் தொடர்ந்து ரெண்டு பேரும் ஆகாஷ் வீட்ட இருந்து கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.பின் ஆகாஷ் இனியாவைப் பாத்து உங்க அப்பா எடுத்த முடிவு தான் சரியா இருக்கும் நீ அவரையே கலியாணம் பண்ணு என்று சொல்லுறார். அதைக் கேட்டு இனியா ரொம்பவே பீல் பண்ணுறாள். இதனை அடுத்து இனியா பாக்கியாட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். பின் சுதாகர் குடும்பத்தோட பாக்கியா வீட்ட வந்து நிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement