• Dec 24 2024

ராதிகா கேட்ட கேள்வி! பளார் என்று பாக்கியா கொடுத்த பதிலடி! சதி வலையில் சிக்கிய கோபி!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம் 


இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் முதல் ரவுண்டில் வெற்றி பெற்று விடுகிறார். கோபி மற்றும் பாக்யாவை மேடைக்கு அழைத்து கௌரவமாக பேசினார். இதனை ராதிகா, டிவியில் பார்த்தது பாக்கியாவுக்கும், கோபி கூட சேர்ந்து வாழனும் என்று ஆசை இருப்பது போல் ராதிகா நினைத்து கொள்கிறார். 

d_i_a

மயூவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக பாக்கியா ராதிகா வீட்டுக்கு போகிறார்.  "மயூ பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்க வந்திருக்கிறேன் பண்ணலாமா" என்று பெர்மிஷன் கேட்கிறார். மயூவை வாழ்த்தி "சந்தோசமாக நல்ல படித்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழனும்" என்று சொல்லி கையில் கொண்டு வந்த கிஃப்ட்டையும் கொடுத்துவிட்டார்.


பின்னர் ராதிகா "நீங்கள் அனைவரும் மேடையில் நின்று பேசியதை டிவியில் பார்த்தேன் என்று சொல்கிறார். அத்துடன் உங்களுக்கும்  சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்னிடம் ஏன் கோபி உங்களுக்கு பிடிக்காத மாதிரி பேசி நடந்து கொள்கிறீர்கள்" என்றுபாக்யாவிடம் கேட்கிறார். " இந்த ஜென்மத்தில் இல்லை எப்பொழுதுமே அந்த நபர் என்னுடைய வாழ்க்கையில் கிடையவே கிடையாது. அப்படி ஒரு எண்ணம் துளி கூட என்னிடம் இல்லை" என்று தெளிவாக ராதிகாக்கு சொல்லி விட்டு செல்கிறார் பாக்கியா. 


கோபி, ஈஸ்வரிடம் மயூக்கு பிறந்தநாள் நான் போய் வாழ்த்து சொல்லிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். உடனே செழியன், இப்பதான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம் நீங்கள் ரெஸ்ட் எடுங்க போக வேண்டாம் என்று தடுக்கிறார். நீ ஒன்னும் ராதிகா வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம், அங்க போனாலே உனக்கு பிரச்சினை வந்து விடும் என்று ஈஸ்வரி தடுக்கிறார்.  இதையெல்லாம் ஜெனி, பாக்கியா மற்றும் செல்வி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது செல்வி, இவங்க மூன்று பேரும் பல சதிகளை செய்து ராதிகாவுடன் கோபியை சேரவிட மாட்டாங்க  என்று சொல்கிறார்.

Advertisement

Advertisement