• Dec 26 2024

மீனாவை தவிர எல்லாரும் முட்டாள்களா? பாண்டியன் குடும்பத்தின் அப்பாவித்தனத்தால் சிக்கல்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எல்லோரும் விடை பெற்று செல்வது, கை கழுவும் இடத்தில் தங்கமயில் சறுக்கி விழும் போது சரவணன் அவரை தாங்கி பிடிப்பது, வீட்டிற்கு வந்த பின்னர் மீனா தன்னுடைய சந்தேகத்தை தெரிவிக்கும் போது யாருமே அவரை நம்பாதது, அது மட்டும் இன்றி அவரை ’நீ ஓடி வந்தவள் தானே’ என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சரவணன் - தங்கமயில் நிச்சயதார்த்தம் முடிந்து .அனைவரும் கைகழுவ செல்லும் போது கீழே கிடந்த வாழை இலையை தெரியாமல் தங்கமயில் மிதித்து விட அவர் சரிந்து விழப் போகும் போது அருகில் இருந்த சரவணன் அவரை தாங்கி பிடித்து கொள்கிறார். இருவரும் கண்ணும் கண்ணும் நோக்கி காதலில் இருக்கும் நிலையில் சரவணனின் சகோதரர்கள் மற்றும் மாமா கிண்டல் செய்கின்றனர்.

இதனை அடுத்து தங்கமயில் விட்டாரிடம் விடைபெற்று பாண்டியன் குடும்பத்தார் வீட்டுக்கு வருகின்றனர். வீட்டுக்கு வந்த பின்னர் மீனா தன்னுடைய சந்தேகத்தை மீண்டும் தெரிவிக்கிறார். ஒரு வீட்டில் உள்ளவர்களிடம் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்யும், ஒரு குறை கூட இல்லாமல் பர்ஃபெக்டாக யாருமே இருக்க மாட்டார்கள், ஆனால் தங்கமயில் வீட்டில் உள்ள எல்லோரும் பர்ஃபெக்டாக இருந்தது எனக்கு சந்தேகத்தை அளிக்கிறது, ஒரு சீரியல் போல் நாடகத்தனமாக உள்ளது’ என்று கூறினார்.



ஆனால் கோமதி அதை நம்பவில்லை, ’பர்ஃபெக்டாக இருப்பது நல்லது தானே’ என்று கூறி சமாளிக்கிறார். இதனை அடுத்து ராஜி ’இவ்வளவு பர்ஃபெக்டாக இருப்பவர்கள் எங்க ரெண்டு பேரையும் பார்த்து ஓடி வந்தவர்கள் என்று சொன்னது இடிக்குதே’ என்று கூறும் போது, ’நம்ம ஊர்க்கார்களை பற்றி உனக்கு தெரியாதா? அப்படித்தான் ஏதாவது கள்ளங்கபடம் இல்லாமல் பேசுவார்கள், அதற்காக அவர்களை கெட்டவர்கள் என்று எடுத்து கொள்ள வேண்டாம்’ என்று கூறுகிறார். ஆனால் அதன் பின்னர் கோமதி மீனாவிடம் சொன்னது தான் சிக்கலை ஏற்படுத்தியது. அவர் மீனாவிடம் ’உன்னையும் நாங்கள் முறைப்படி பெண் பார்த்து கல்யாணம் செய்து இருந்தால் உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும், நீ ஓடி வந்தவள் தானே’ என்று சாதாரணமாக கூற, அதை மீனா சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்.

ஏற்கனவே பாக்கியம் ’ஓடி வந்தவள் தானே’ என்று கூறியது அவரது மனதை புண்படுத்த தற்போது கோமதியும் கூறியது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இதனை அடுத்து தனது அண்ணனுக்கு ஒரு நல்ல கிப்ட் வாங்க வேண்டும் என்று மீனாவின் கணவர் கேட்க அப்போது ’என்னிடம் ஏன் கேட்கிறாய், நான் தான் ஓடி வந்தவள் தானே’  என்று கூறும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

ஒரு பொய், இரண்டு பொய் அல்ல,  வண்டி வண்டியாக பொய் சொல்லி இந்த திருமணத்தை மீனாவின் பெற்றோர் நடத்த முயற்சிக்கும்போது மீனாவை தவிர வேறு யாருக்கும் சந்தேகம் எழவில்லை என்பது அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அப்பாவிகளா? அல்லது முட்டாள்களா? என்ற கேள்வி எழுகிறது.  இனிவரும் நாட்களாவது சுதாரிப்பார்களா? ஆனால் அப்படியே சுதாரிதாலும் சரவணன் - தங்கமயிலுக்கு கிடையே லவ் செட் ஆகிவிட்டதால் திருமணத்தை நிறுத்த முடியுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement