• Dec 27 2024

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்... 27 வயதில் உயிரிழந்த பிரபல யூடியூபர்!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் தற்போது டிக் டாக் பிரபலங்கள், இன்ஸ்டா பிரபலங்கள் மட்டுமின்றி யூடியூப் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பிரபலங்களாகவே காணப்படுகிறார்கள்.

தமிழ், இந்தி, தெலுங்கு என பல்மொழிகளிலும் தனது தனித்துவ பண்பினால்  கத்தி பேசி பிரபலமானவர்தான் ஆங்கிரி ரேண்ட்மேன்.

அதன்படி யூட்யூபில் கத்திக் கொண்டே ஆக்ரோஷமாக பேசுபவர் தான் ரேண்ட்மேன். இவ்வாறு இவர் ஆவேசமாக கத்திப் பேசி விமர்சனம் பண்ணுவதால் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் காணப்பட்டார். அதனாலேயே அவர் ஆங்கிரி ரேண்ட்மேன் என்று அழைக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு ஆங்கிரி ரேண்ட்மேனின் என்ற youtube சேனலை தொடங்கினார். இவரது இயற்பெயர் அப்ரதீப் சாஹா. இவர் படிப்படியாக வீடியோக்களை விமர்சித்து அதன் பின்பு பிரபல  யூடியூபரானர்.


நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் மற்றும் விக்ரம் போன்ற படங்களை விமர்சித்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் வைரலானது. அந்த விமர்சனத்தால் இவரும் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், பிரபல யூட்யூபரான ஆங்கிரி ரேண்ட்மேன் தனது 27ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமாத்துறை சார்ந்தவர்களையே வெகுவாக பாதித்துள்ளது.

ஆங்கிரி ரேண்ட்மேன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளில் குறைபாடு காணப்பட்டதன் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனாலும் என்னும்இவரின் மரணத்திற்கு என்ன காரணம் என உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இவரது மரணத்திற்கு பலரும் தமது இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement