• Dec 26 2024

அந்த வீடே உன் கட்டுப்பாட்டுக்குள் வரணும்.. தங்கமயிலுக்கு தூபமிடும் பாக்கியம்.. பாண்டியன் அட்ராசிட்டி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நாம் எதிர்பார்த்ததை விட அதிக பட்ஜெட்டில் ஜவுளி எடுக்க வேண்டிய நிலை வந்து விட்டது என பாண்டியன் புலம்ப, அப்போது மீனா குத்தி காட்டுகிறார்.

ஒரு அரேஞ்ச் மேரேஜ் என்றால் இவ்வளவு செலவாகும், ஆனால் ஓடிப்போய் கல்யாணம் செய்தால் இவ்வளவு செலவாகாது, எங்கள் திருமணத்திற்கு வெறும் ரூ20000 தான் ஆனது என்று கூற, அதற்கு பாண்டியன் உடனே ’அதற்காக சரவணன் தங்க மயிலை கூட்டிக்கொண்டு ஓடிப் போய் திருமணம் செய்ய முடியுமா? பெரியவர்கள் பார்த்து செய்கிற திருமணம் என்றால் இப்படித்தான் இருக்கும்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் ஜவுளி எடுத்து வீட்டுக்கு வரும் தங்கமயில் குடும்பத்தினர் சோர்வாக இருக்கும் நிலையில் பாக்கியம் தங்க மயிலுக்கு தூபமிட்டு சில தவறான அறிவுரைகளை கூறுகிறார். அந்த வீட்டிற்கு நீ தான் மூத்த மருமகள். ஓடிவந்த  மீனா கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுவது போல் தெரிகிறது, நீ அந்த வீட்டிற்குள் சென்றவுடன் எல்லாரையும் நீ கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும், உன்னுடைய ராஜ்யம் தான் அங்கு நடக்க வேண்டும், மளிகை கடை கணக்கெல்லாம் நீதான் பார்க்க வேண்டும், அப்போது தான் ராணி மாதிரி நீ வாழலாம் என்று கூறுகிறார். கவரிங் நகைகளை போட்டது பற்றி எல்லாம் நீ ஏதும் நினைத்துக் கொள்ளாதே, பல வீடுகளில் இது நடப்பது தான் என்றும் அவர் தூபம் ஏற்றுகிறார்.



இந்த நிலையில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்து கொண்டிருக்கும் நிலையில் எதிர் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வருகின்றனர். அவர்களுக்கு கேட்கும் வகையில் பாண்டியன் செய்யும் அட்ராசிட்டி காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன. சில பேர் சரவணனுக்கு கல்யாணமே நடக்காது என்று கூறினார்கள், அவர்களுடைய வயிறு எரியும் வகையில் இந்த தெரு முழுவதும் சீரியல் லைக் போட வேண்டும், பந்தல் போட வேண்டும், ஒரு சிலரின் காது கிழிய பாட்டு போட வேண்டும், என்று பாண்டியன் கல்யாண ஏற்பாடு செய்ய வந்த நபரிடம் கூறி எதிர் வீட்டில் உள்ளவர்களை வெறுப்பேற்றுகிறார்.

பாண்டியனின் அட்ராசிட்டியை அவரது மூன்று மகன்களும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள முத்துவேல்- சக்திவேல் குடும்பத்தினர் கடுப்பாகிறார்கள். கல்யாணம் திட்டமிட்டபடி நடக்குமா? எதிர் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சதி செய்வார்களா? பாண்டியன் அட்ராசிட்டியால் ஏதேனும் விபரீதம் நடக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement