• Dec 26 2024

நேரம் பார்த்து போட்டு கொடுத்த தங்கமயில்.. ருத்ர தாண்டவம் ஆடிய பாண்டியன்.. கோமதி, ராஜி அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலின் இன்றைய எபிசோடில்  கதிர் வந்து சாப்பிட உட்கார்ந்த போது, திடீரென தங்கமயில் சாப்பாடு பரிமாற முயற்சிக்கிறார். அப்போது கோமதி கோபமாக ’நீ உன்னுடைய வேலையை மட்டும் பார், உன்னுடைய புருஷனுக்கு மட்டும் சாப்பாடு பரிமாறு, ராஜி புருஷனுக்கு அவள் சாப்பாடு பரிமாறி கொள்வார், எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்காதே’ என்று கண்டிப்புடன் கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமயில் தூங்கிக் கொண்டிருக்கும் சரவணனை எழுப்ப வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சத்தமாக அழுகிறாள். சரவணன் எழுந்த போது அவரிடம் அத்தை தன்னை திட்டி விட்டதாக சொல்லி கோள் மூட்டுகிறார். ஆனால் சரவணன் ’அம்மா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள், ராஜி, மீனா இருவரை கூட இது மாதிரி விளையாட்டாக தான் சொல்வார்கள், அதை அவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்.



இந்த நிலையில் மறுநாள் காலை பாண்டியன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது காபி கொடுக்க வரும் தங்கமயில், சரியான நேரம் பார்த்து ராஜி டியூஷன் எடுக்கிறார் என்றும், உங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இந்த முடிவை எடுத்து விட்டார்கள் என்றும் அது எனக்கு மனசு சங்கடமாக இருந்தது என்றும் ஆனால் என்னால் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்க முடியாது என்றும் நேரம் பார்த்து ஏத்தி விடுகிறார்.

இதனால் அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடையும் பாண்டியன் ’என்னை கேட்காமல் எப்படி ஒரு முடிவு எடுக்கலாம்’ என்று ஆத்திரமாக கூறுகிறார். அப்போது கோமதி மற்றும் ராஜி ஆகிய இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது அவர்கள் இருவரிடமும் பாண்டியன் சத்தம் போடுகிறார். நான் புண்ணாக்குக்கு இந்த வீட்டில் இருக்கிறேன், என்னிடம் சொல்லிவிட்டு தானே டியூசன் ஆரம்பிக்க வேண்டும்’ என்று கூட கோமதி மற்றும் ராஜியிடம்  கோபமாக பாண்டியன் கூறும் காட்சியும் அதை பார்த்து தங்கமயில் ரசிக்கும் காட்சியும் இன்றைய எபிசோடில் உள்ளன.

Advertisement

Advertisement