• Dec 26 2024

சென்னை போயும் விடாத தொல்லை.. பழனி மாமாவுக்கு ஐஸ், தங்கமயிலுக்கு ஆப்பு வைத்த ராஜி..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய எபிசோடில் சரவணன், தங்கமயில் ஆகிய இருவரும் தாங்கள் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொள்றார்கள்,  அப்போது 1200 ரூபாய் செலவு செய்து படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட், இனிமேல் நாம் அப்பாவுக்கு இந்த மாதிரி செலவு வைக்க கூடாது, படம் பார்ப்பது தவறில்லை, ஆனால் இந்த செலவு ரொம்ப ஓவர் என தங்க மயிலுக்கு சரவணன் அட்வைஸ் செய்கிறார். இதனால் தங்கமயில் அதிருப்தி அடைகிறார்.

இதனை அடுத்து கதிர் மற்றும் பழனி மாமா ஆகிய இருவரும் வீட்டில் வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் ராஜி, பழனிக்கு ஐஸ் வைக்கிறார். அப்போது கதிர் அதனை கேலி செய்ய, தனக்கு டியூசனுக்கு ஆள் பிடித்து தாருங்கள் என்று ராஜி சொல்ல, பழனி மாமாவும் ஓகே சொல்கிறார்.

இந்த நிலையில் சென்னை சென்ற செந்தில் மற்றும் மீனா அறையில் ஓய்வு எடுக்க தொடங்கும் போது கால் வலிப்பதாக கூறிய மீனாவுக்கு அவருடைய காலை செந்தில் பிடித்து விடுகிறார். அப்போது கோமதி போன் செய்ய அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென வரும் தங்கமயில் கோமதியிடம் இருந்து போனை பிடுங்கி பேசுகிறார். அதனால் கோமதி அதிருப்தி அடைந்தாலும் அதை கண்டுகொள்ளாத தங்கமயில் சென்னையில் என்னுடைய தோழி இருக்கிறார், அவங்க வீட்டுக்கு போங்க, இல்லாட்டி உங்கள பார்க்க அவளை வர சொல்கிறேன் என்று தேவையில்லாததை பேசுகிறார்.



அப்போது திடீரென பாண்டியனிடம் போனை கொடுத்து மாமாவுடன் பேசுங்க என்று சொல்ல பாண்டியன் - மீனா இடையே ஒரு சிறு உரையாடல் நடக்கிறது. அதன் பிறகு செந்தில் இடம் போனை கொடுக்கும் போது பாண்டியன் மணிகணக்காக போனிலேயே செந்திலுக்கு அட்வைஸ் செய்கிறார். இதை பார்த்து கடுப்பான மீனா தூங்கி விடுகிறார். ஒரு வழியாக பாண்டியன் போனை கட் செய்தவுடன் செந்தில் - மீனா உரையாடல் நடக்கிறது.

இந்த நிலையில் ராஜியின் டியூஷனுக்காக  பசங்களை அழைத்து வரும் பழனி மாமா காட்சிகளும், அதை  பார்த்து ராஜி சந்தோஷம் அடைய , தங்கமயில் அதிர்ச்சி அடையும் காட்சிகள் உள்ளன. ஒரு பேச்சுக்கு சொன்னேன், நிஜமாகவே டியூஷன் எடுக்க போறீயா’ என்று தங்கமயில் கேட்க, ‘ஆமா பேச்சு பேச்சாக இருக்க கூடாது, செயலில் இறங்க வேண்டும்’ என்று ராஜி கூறுகிறார். இதனை எடுத்து பசங்களை ராஜி விசாரிக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

 நாளைய எபிசோடில் பசங்களுக்கு ராஜி டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வரும் தங்கமயிலுக்கு ராஜி ஆப்பு வைக்கும் முன்னோட்ட காட்சிகள் உள்ளன.

Advertisement

Advertisement