• Apr 07 2026

வீட்டை விட்டு வெளியேறிய கோமதி.. நாடகமென அலட்சியப்படுத்தும் பாண்டியன்.! டுடே எபிசொட்

shali / 3 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி ஒரு மரியாதையும் இல்லாத இடத்தில நான் ஏன் இருக்கணும் என்று சொல்ல, பாண்டியன் உடனே உனக்கு இந்த வீட்டில என்ன மரியாதை இல்ல என்று கேட்கிறார். மேலும், அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சிட்டால் என்று காந்திமதியைப் பார்த்துச் சொல்லுறார் பாண்டியன். பின் கோமதி, ஓ.. நான் நல்லா நடிச்சால் இங்க எனக்கு என்ன விருதா தரப்போறாங்க என்று கேட்கிறார்.

அதைத் தொடர்ந்து பாண்டியன் கோமதியைப் பார்த்து நீ ஒரு நாள் கூட என்கிட்ட நாடகம் போடலயா என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி புருஷன் கதைக்கோணும் என்று தான் நான் அப்படி எல்லாம் செய்தேன் அது ஒன்னும் நாடகம் இல்ல என்கிறார். மேலும், இனிமேல் நான் நாடகம் ஆடினேன் என்று சொல்லுறதுக்கு நான் இனிமேல் இங்க இருக்கமாட்டேன் கிளம்புறேன் என்கிறார்.


பின் அரசி நீ சொல்லுறது ஒன்றையும் நம்பகூடிய மாதிரி இல்ல என்று சொல்ல, கோமதி அதுக்கு கோபமாக நீயும் அவர மாதிரியே கதைச்சியோ தெரியும் உனக்கு என்று பேசுறார். அதனை அடுத்து கோமதி இனிமேல்  இந்த வீடு இருக்கிற திசை பக்கமே வரமாட்டேன் என்கிறார். அதைக் கேட்டு குடும்பத்தில எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

பின் கோமதி வீட்டை விட்டு போறதைப் பார்த்த காந்திமதி கதறி அழுகிறார். அதைத் தொடர்ந்து கதிர் பாண்டியனை போய்க் கூட்டிக் கொண்டு வரச்சொல்லுறார். அதைக் கேட்ட பாண்டியனும் கோமதி பின்னாடியே போய் வீட்டிற்கு வரச் சொல்லுறார். அப்படியே ரோட்டில ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டு போகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement