• May 23 2026

ஆட்டம் ஆரம்பம்! சூர்யாவின் 'கருப்பு' படத்திலிருந்து வந்த அதிரடி அப்டேட்.. என்ன தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் “கருப்பு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஒளிப்பதிவை ஜி.கே. விஷ்ணு கவனிக்க, இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார்.


“கருப்பு” திரைப்படம் 2026 மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில், “கருப்பு next loading.. Game Starts Now.!” என குறிப்பிட்டுள்ளார். இந்த குறும்பதிவு ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அப்டேட் படம் தொடர்பான அடுத்த அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இதனால் “கருப்பு” படத்தின் மீதான ஹைப் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement