சுதா கெங்கார ஆரம்பத்தில் சூர்யாவை வைத்து படமாக்க ஆரம்பித்து கைவிடப்பட்ட புறநாநூறு எனும் படத்தினை தற்போது முன்னனி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வருகின்றார். இப் படத்தில் sk உடன் இணைந்து அதர்வா ,ஜெயம்ரவி ,ஸ்ரீலில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
1965 களில் நடைபெற்ற உண்மை கதையினை கதைக்களமாக வைத்து படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இப் படத்தின் தலைப்பினை புறநாநூறில் இருந்து பராசக்தி என மாற்றியுள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் வேலைகளினை படக்குழு இலங்கையில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் பெரும்பாலான வேலைகளை மே மாதத்திற்குள் முடித்து தருமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப் படத்தினை விட sk பல ஹிட் கொடுத்த இயக்குநர்களுடன் படம் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளதாகவும் இதனால் தான் பராசக்தி சூட்டிங் வேலைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
Listen News!