சுமார் 3600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள்.
அஜித் குமார் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாகவே அமைந்துள்ளது. படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றார்கள்.
அஜித் குமாரும் திரிஷாவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். ஆனால் அதே இளமையுடன் அதே ரொமான்ஸுடன் காட்டப்பட்ட காட்சிகள் யாவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அட்டகாசமான அதிரடி காட்சிகளும், பிக்பாஸ் ஆரவ் அவருடைய கேங் உடன் நடத்திய சண்டை காட்சிகளும் பெரிதும் பேசுப் பொருளானது. மேலும் இந்த படத்தில் வழமையாக அஜித்துக்கு கொடுக்கப்படும் மாஸ் என்ட்ரியோ, மாஸ் இன்றோவோ பாடலோ எதுவுமே இல்லை. அவருடைய வயதுக்கு ஏற்ற பக்குவத்தையே இந்த படம் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் முதலாவது நாளில் நடத்திய வசூல் வேட்டை பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாகவும், தமிழ் நாட்டில் மட்டும் 25 கோடிகளை வசூலித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனாலும் இது பற்றி அதிகார்வ பூர்வ தகவலை இன்னும் இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!