பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், இனியா பாக்யாவிடம் நீ முன்ன மாதிரி இல்ல ரொம்ப மாறிட்டா ஆனாலும் சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, அதற்கு பாக்கியா ஏனென்றால் அவ்வளவு வலிகளை தாங்கி வந்திருக்கேன் என்று சொல்லி சிரிக்கின்றார்.
அந்த நேரத்தில் செல்வி, டிவோஸ் பற்றி கோபி சார் என்ன முடிவு எடுத்திருப்பாரோ இல்லையோ ஆனால் ஈஸ்வரி அத்தை எடுத்திருப்பார் என்று சொல்ல, அது ஈஸ்வரியின் காதில் விழுந்து விடுகின்றது. அதன் பின்பு அவர் கோபியிடம் சென்று ராதிகாவுக்கு டிவோஸ் கொடுக்குமாறு பக்குவமாக எடுத்துச் சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து ராதிகாவை பார்ப்பதற்காக கோபி அவருடைய வீட்டுக்கு செல்கின்றார். ஆனால் அங்கு யாரும் இல்லை. கமலாவும் வீட்டை காலி பண்ணி விட்டு சென்றதாக வீட்டின் ஓனர் தெரிவிக்கின்றார். கோபி அங்கு இருக்கும் போது பாக்யாவும் ராதிகாவை பார்க்க அங்கு வருகிறார்.
ஆனால் ராதிகா அங்கு இல்லை என கோபி பாக்யாவிடம் சொல்கின்றார். மேலும் கல்யாணம் பண்ணும் போது இரண்டு பேரும் கதைத்து தான் பண்ணினோம். ஆனால் பிரியும் போது மட்டும் தனியாக முடிவெடுத்து விட்டார் என்று சொல்லுகின்றார். அதற்கு பாக்கியா, ராதிகா ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.. ரொம்பவே அழுது இருக்காங்க என்று கோபிக்கு சில விஷயங்களை சொல்லிக் காட்டி பதிலடி கொடுக்கின்றார்.
இறுதியில் வீட்டுக்குச் சென்ற பாக்யா ரெஸ்டாரன்ட் கணக்கை பார்த்து இம்முறை நல்ல லாபம் வந்தது. அதில் வேலை ஆட்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரத்தில் ராதிகா போன் பண்ணி வீட்டுக்கு வந்தீங்களா? என்று விசாரிக்கின்றார். அதற்கு ஆமாம் , எங்கே இருக்கீங்க என்று பாக்கியா கேட்கவும் அவர் சொல்லவில்லை. சந்தர்ப்பம் வரும்போது சொல்லுகின்றேன் என சொல்லுகின்றார்.
பாக்யா ராதிகாவுடன் கதைத்துக் கொண்டிருப்பதை பார்த்த கோபி அவரிடம் இருந்து போனை வாங்கி பேசுகின்றார். ஆனால் கோபியின் குரல் கேட்டதும் ராதிகா ஃபோனை கட் பண்ணி விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!