• Dec 26 2024

இப்பவாச்சும் புரிஞ்சிக்கோங்க பாக்கியா! கதிர் கண்ணில் சிக்கும் ராஜி? அடாவடி பண்ணும் கண்ணன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கோமதி சமைத்துக் கொண்டு இருக்க, மீனா தனது புருசனுக்கு போன் எடுக்க செல்கிறார். அங்கு அவர், ராஜி வீட்டை விட்டு போன விடயத்தையும், கல்யாணம் நின்று போன விடயத்தையும் சொல்ல மீனா ஷாக் ஆகிறார். நான் அத்தைகிட்ட சொல்லுறன் என, பாக்கியாவிடம் சொல்லிவிட்டு கோமதியை ரூம்க்கு அழைத்து செல்கிறார் மீனா. ஹோட்டலுக்கு செல்லும் போது கோமதி என்ன விஷயம் என கேட்க, ரூம்க்கு வாங்க சொல்லுறேன் என சொல்லி கூட்டிச் செல்கிறார். 

இவ்வாறு ரூம்க்கு செல்லும் போது, ராஜி மறுபக்கம் வாசலில் நிற்கிறார். கோமதி, கதிர், மீனா கண்ணில் அவர் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரும்பி செல்ல, இவர்களும் ராஜியை கவனிக்காமல் சென்று விடுகிறார்கள்.


பின்பு கதிர், கோமதிக்கு ரூமில் வைத்து ராஜி ஓடிப்போன விஷயத்தை சொல்ல, கோமதி தலையில் அடித்து அழுகிறார்.

மறுபக்கம், ஜெனிக்கு பாக்கியா வாய்ஸ் போடுகிறார். உன் குழந்தை உனக்கு கிடைக்கும், அதற்கு நான் பொறுப்பு என்று.. பிறகு சமைத்த பொருட்கள் அனைத்தையும் வண்டியில் ஏற்றி வைக்க, பாயாசத்தை மினிஸ்டர் அனுப்பிய பெண்கள் தவறி கொட்டி விடுகிறார்கள். எனினும், அவர்களுக்கு பேசிவிட்டு மீண்டும் பாயாசத்தை செய்து அனுப்புகிறார் பாக்கியா.

இன்னொரு பக்கம், பாண்டியனுக்கு போன் செய்து கோமதி அழுகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லிய பாண்டியன், கோமதியை பார்த்துக் கொள்ளுமாறு மீனாவிடம் சொல்கிறார்.

ராஜி வீட்டில் எல்லாரும் கலங்கிப் போய் இருக்க, ஒரு அப்பனா அவளுக்கு என்ன குறை வச்சன் என கேக்கணும், அவளை கூட்டி வாங்க என முத்து சொல்கிறார்.

ஹோட்டலில் இருக்கும் ராஜிக்கு கண்ணன் சாப்பாடு வாங்கி வர, ராஜி சாப்பிட மறுக்கிறார். கண்ணன் அவரை சமாதானம் செய்யவும், எனக்கு பயமா இருக்கு என ராஜி சொல்ல, அந்த இடத்திற்கு பாக்கியா வருகிறார். சண்டை போடும் இருவரையும் பார்க்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்...

Advertisement

Advertisement