• Dec 26 2024

Vijay Tv Set-ல் பிரியாங்காவிற்கு நடந்த அசாம்பாவிதம்? கடும் சோகத்தில் குடும்பத்தினர்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. 

இவர், ஜாலியான பேச்சுக்கும் கலகலப்பான சிரிப்புக்கும் என்றே தனியாக பெயர் போனவர். தற்போது  இவரை தெரியாத மக்களை இல்லாத அளவுக்கு மிகவும் பிரபலமாகி விட்டார்.

மேலும், இவர் மூன்று முறை தொடர்ச்சியாக சிறந்த பெண் தொகுப்பாளினி விருது பெற்ற ஒருவராக காணப்படுகிறார்.


அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான இவர், தொடர்ந்து விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொகுப்பு ஒன்றில் வைத்து, விஜே பிரியங்காவிற்கு சின்ன விபத்து நடைபெற்று உள்ளது.


அதன்படி, பாடகர் தேவா மேடையில் நின்று பாடிக் கொண்டு இருக்கும் நேரத்தில், கடைசி ஷூட்டை முடிப்பதற்காக பிரியங்காவும் மேடைக்கு ஏறியுள்ளார்.

அந்த நேரத்தில், மைக்கின் வயர் அவரது காலில் சிக்குண்ட நிலையில், அவர் தடக்கி கீழே விழுந்துள்ளார்.

அதன் காரணமாக அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். தற்போது இந்த தகவல் படு வைரலாகி உள்ளது.  

Advertisement

Advertisement