• Apr 23 2026

அரசியல் வேறு.. தனிப்பட்ட வாழ்க்கை வேறு.! விஜய் விஷயத்தில் நண்பர் ஸ்ரீமன் காட்டம்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தொடர்பான விவாகரத்து செய்தி சமீப நாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான குடும்ப பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகியதன் பின்னர், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.


சமீபத்தில் சங்கீதா, நடிகர் விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்க கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் விவாதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் இந்த விவகாரம் குறித்து கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் கூறிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.


இந்த விவகாரம் குறித்து ஸ்ரீமன், “நான் அவருக்கு நண்பர் மட்டும் தான். உறவினர் இல்லை. உங்களைப் போல நானும் ஒரு சாதாரண நபர் தான். ஆனால் விஜய் பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் அது வேலைக்கு ஆகிவிடுகிறது. உங்கள் அரசியல் வேறு, நட்பு வேறு, வியாபாரம் வேறு. அவரின் தனிப்பட்ட பிரச்சனை பற்றி பேச நாம் யார்?” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், “அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அந்த விஷயத்திற்கு நீதிமன்றத்தில் சட்டம் பதில் சொல்லும். அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு. இரண்டையும் ஒன்றாக கலந்து பார்க்கக்கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, “எல்லாவற்றுக்கும் மேலாக கடல் நீர் வற்றும் வரை அவருக்கு ஆதரவு இருக்கும்” என்றும் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement