தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தொடர்பான விவாகரத்து செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான குடும்ப பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தொடர்பான இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் வையாபுரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து பேசுகையில் நடிகர் வையாபுரி கூறியதாவது, “ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது தவறான விஷயம். அது அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான பிரச்சனை. அந்த விஷயத்தை வெளியில் இருந்து நாம் பேசுவது சரியானது அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
வையாபுரியின் இந்த கருத்து தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுமக்கள் அதிகமாக பேசுவது சரியானது அல்ல என்ற கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!