• Jan 08 2025

விமான நிலையத்திற்கு வீல் சேரில் வந்த பொன்னம்பலம்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80, 90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பயங்கர வில்லனாக  நடித்த நடிகர் தான் பொன்னம்பலம். இவர் நடிகராக மட்டுமில்லாமல் ஸ்டண்ட்மேனாகவும தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

பொன்னம்பலம் ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மற்றும் பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஒருவராக காணப்பட்டுள்ளார். இவர் அதிகமாக வில்லன் கேரக்டரில் தான் நடித்துள்ளார். எனினும் இடியுடன் கூடிய மழை என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

d_i_a

இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தார் பொன்னம்பலம். அதன் பின்பு அரசியலில் இருந்து விலகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.


இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வீல் சேரில் வந்துள்ள நடிகர் பொன்னம்பலத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இதன்போது அவருடைய உடல் நலத்தை விசாரித்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.

தற்போது பொன்னம்பலம் விமான நிலையத்தில் இருந்து வீல் சேரில் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்ற தகவல் இதுவரையில் உறுதியாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement