• Dec 27 2024

பொண்ணுங்க விசயத்துல நீ அப்படி தானே..விஷ்ணுவை நாறடித்த விஜய் வர்மா? சூடுபிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனன்யா, விஜய் வர்மா ஆகிய இருவரும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியார்களின் ஆட்டம் கொஞ்சம் சூடேறும் என்று எதிர்பார்த்த நிலையில், அவ்வாறு ஒன்றுமே இடம்பெறவில்லை. மாறாக புல்லி கேங் மட்டுமே தமது வேலையை காட்டி வந்தனர்.

ஏற்கனவே, 2 டாஸ்க்கில் விஜய் வர்மா, விஷ்ணுவை கழுத்தை பிடித்து இழுத்தார். அதற்கு முன்னதாக பிரதீப்பிடம் விஜய் நடந்து கொண்ட முறைக்காக, கமல் ஹாசன் ரெட் கார்டு கொடுத்து எச்சரித்து இருந்தார். ஆனால், அதன் பின்னரும் விஜய் அப்படி நடந்து கொண்ட காரணத்தால், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.


இருப்பினும், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் வர்மா, குறித்த விஷயம் தொடர்பில் மீண்டும் இழுத்துப் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

இந்த ஆம்பள (விஷ்ணு) என்ன இங்கே இப்படி நடக்கிறது? வெளில ஆம்பள என்று சொல்லுறாங்க தானே.. டாஸ்க் 2ல ஒருத்தர் தையல் போட்டாரு தானே, ஒருத்தர் கீழே விழுந்தார் தானே..அதுல இந்த ஆம்பள என்ன பண்ணினார் தெரியுமா என விஷ்ணு போல நடித்துக் காட்டுகிறார் விஜய்.


அத்துடன், கேம்மை முதலில் கேமாக பாக்கணும், அதன்பின்  மணியை அழைத்து உண்மையா உன்ட மனச தொட்டு சொல்.. விஷ்ணு உன்ட கழுத்த பிடிச்சு நெறுக்கும் போது நான் காப்பாற்றினேனா இல்லையா என்று கேக்க, அதற்கு மணி, ஆமா  என்று சொன்னார்.

உடனே விஜய் இதற்கும், நான் விஷ்ணுவிற்கும் செய்ததிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்று கேள்வி எழுப்பினார். ஆனாலும், விஷ்ணு பிடி கொடுக்காமல் போக, மீண்டும் வாக்குவாதம் முற்றி விஷ்ணு நான் என்ன ரெளடியா என்று கேட்க, நீ ரெளடியை விட கேவலமான ஆள் என்று சாடினார் விஜய்.

அதுமட்டுமின்றி, ரெளடிகள் கூட பெண்களுக்கு மரியாதை கொடுப்பாங்க. ஆனால் உன்னட்ட அது இல்லவே இல்லை. உனக்கு தேவை என்டா ஒரு பொண்ண நீ எப்படி எண்டாலும்  நாறடிப்பாய்.. என்று விளாசி தள்ளியுள்ளார்.


Advertisement

Advertisement