தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் அடுத்த திரைபடம் தொடர்பான அப்டேட் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஜெயம்ரவி-34 திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
படம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெம் ரவி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரதர். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படமான ஜெயம் ரவி-34 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!