• Dec 31 2024

பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு...! ஒன்னுக்கு இரண்டு லட்டா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் வெளியான கோமாளி, லவ் டுடே ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அதிலும் லவ் டுடே படத்தில் இவரது நடிப்பு மற்றும் இயல்பான காமெடி என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் இடம் பெற்ற பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி மற்றும் அஸ்வந் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

இந்த நிலையில், பிரதிப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் தெலுங்கு மற்றும் மலையாள நடிகைகள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி மலையாளத்தின் பிரபல நடிகையாக காணப்படும் மமிதா பைஜூ, தெலுங்கு பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் பிஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர்  இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement