• Feb 26 2025

தயாரிப்பாளரின் மகளால் வெற்றியின் உச்சத்தில் பிரதீப் ரங்கநாதன்..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி லவ் டுடே படத்தில் மிகவும் அருமையாக நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் 21 ஆம் திகதி அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபாமா மற்றும் கஜாடு போன்ற ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகின்றது.


இந்த கூட்டணி மீண்டும் இணையலாம் என இயக்குநர் கூறியிருந்தார். இதை கேட்ட இவரது முதல் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இதைவிட இவரது மகளும் பிரதீப்பும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்தான் தனது தந்தையிடம் பிரதீப்பின் திறமைகளை பார்த்துவிட்டு அறிமுகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கோமாளி படம் முடிந்ததுமே இன்னும் இரண்டு படங்கள் உங்களது தயாரிப்பில் செய்து தருவேன் என இவர் வாக்கு கொடுத்துள்ளார். இதனால் dragon பட வெற்றியின் பின்னர் தயாரிப்பாளர் உஷாராகி அடுத்த படம் தங்களது தயாரிப்பில் செய்து தருமாறு கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதைவிட பிரதீப் வரிசையில் விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் lic எனும் திரைப்படமும் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரதீப்பை வைத்து இயக்குவதற்கும் நடிப்பதற்கும் தயரிப்பாளர்கள் வரிசையில் இருக்கின்றனர். பிரதீப்பின் அடுத்த படம் யாருக்கு என பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement

Advertisement