சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நேற்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் உற்பட ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜனிகாந்த் தந்து டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில் என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்,பிரேமலதா விஜயகாந்த், திரு.சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும் நன்றி கூறிய தலைவர்.
திரையுலகத்திலிருந்து தன்னை வாழ்த்திய நண்பர் திரு.கமலஹாசன், திரு.வைரமுத்து, திரு.ஷாருக்கான், திரு.அமீர்கான், திரு.பார்த்திபன், திரு.தனுஷ், திரு. சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
— Rajinikanth (@rajinikanth) December 13, 2024
Listen News!