• Apr 20 2026

சத்தமின்றி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடித்து நொறுக்கிய பிருத்விராஜ்!'ஆடு ஜீவிதம்' 100 கோடியை கடந்து விட்டதா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படம் பெப்ரவரி 28ம் திகதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

'ஆடு ஜீவிதம்'  படத்தின் கதைக்களம், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்  பிருத்விராஜ், தனது மனைவி அமலாபாலை  பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இந்தியாவில் ரூ.7.45 கோடி ரூபாவும், கேரளாவில் ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும், உலகளவில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


அதன்படி, கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், 'ஆடு ஜீவிதம்' படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் 100 கோடியை எட்டவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன் ஆடு ஜீவிதம் படம் 75 கோடியை எட்டியுள்ள நிலையில், தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படமும் 100 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

Advertisement