• Dec 26 2024

பிரபல நடிகையின் உயிரிழப்புக்கு காரணமான புஷ்பா பட நடிகர்- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2021ம ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் புஷ்பா. இப்படம் வெளியாகி சுமார்   500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.இப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அண்மையில் கிடைத்து.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படமானது,செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பனாக கேசவ் என்கிற கதாபாத்திரத்தில் ஜெகதீஷ் என்பவர் நடித்தி


இவரை தற்பொழுது பொலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் துணை நடிகையாக இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை காட்டி, அவருடன் மிகவும் நெருக்கமாக பழகி விட்டு, திருமணம் செய்து கொள்ள முடியாது என கைவிரித்துள்ளார்.


 மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் அந்தரங்க போட்டோசை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தேடி வந்த நிலையில், தற்போது ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement