• Apr 18 2026

பாக்கியாவைத் திட்டிய ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்த ராதிகா- டான்ஸ் ஆடி கடுப்பாக்கிய ராமமூர்த்தி- Baakiyalakshmi Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா பொருட் கண்காட்சி நடக்குமா, நடக்காதா என்பதைக் கேட்பதற்காக போகவுள்ளார். அதற்காக கடவுளை வணங்கி விட்டு தான் போய்ட்டு வருகேின்றேன் என மாமனார் மற்றும் மாமியாரிடம் சொல்லி விட்டுக் கிளம்புகின்றார். ஆனால் ஈஸ்வரி பொருட் கண்காட்சி நடக்காது என்று பாக்கியாவைத் திட்டி அனுப்பி வைக்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு கோபி வருகின்றார். அப்போது ஈஸ்வரி பாக்கியா பற்றி தப்பாக சொல்ல, கோபியும் பொருட்காட்சி நடக்காது, பணம் வீணாப் போய்விட்டது என பாக்கியா கண்ணீர் விட்டுக் கொண்டு வந்து நிற்கத்தான் போறா என்று சொல்லி நக்கலடிக்கின்றார்.

இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதிகா, பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ண வேண்டிய நீஙகளே இப்படிப் பேசலாமா என்று ஈஸ்வரியைத் திட்டுகின்றார்.அடுத்தவங்களைப் பற்றி நீங்க எதுக்கு பேசுறீங்க எனக் கேட்கின்றார். அப்போது ராமமூர்த்தி, இவ்வளவு புத்திசாலியாக இருக்கிற நீ எப்பிடியம்மா இவனைக் கட்டினி என்று நக்கலாகக் கேட்டு விட்டு செல்கின்றார்.


இதனால் அப்போ இது முக்கியமா என கோபி அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து செழியன், அம்மாவின் கண்காட்சி விஷயம் என்ன ஆச்சு என்று ராமமூர்த்தியிடம் கேட்க, அவரும் தெரில என்கின்றார். பின்னர் கண்காட்சி 10 நாட்களுக்கு நடக்கும் என்று அறிவித்ததும் எழில் செழியனுக்கு போன் பண்ணி சொல்ல ராமமூர்த்தி எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.

பின்னர் ராமமூர்த்தி பாட்டுப்பாடி சந்தோசத்தைக் கொண்டாடுவதோடு ஈஸ்வரியை வெறுப்பேத்துகின்றார். தொடர்ந்து பாக்கியாவும் எழிலும் பழனிச்சாமியை ஹொட்டலில் சந்தித்து விஷயத்தைச் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement