• Dec 26 2024

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிக்கும் ராகவா லாரன்ஸ்.. இதுதான் காரணம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர், நடன இயக்குனர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து தர ஒப்பு கொண்டிருப்பதாக   அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாத காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், கேப்டன் மகன் சண்முக பாண்டியனுக்காக தான் எதுவும் செய்ய தயார் என்றும், குறிப்பாக அவர் நடிக்கும் படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் இருந்தால் அந்த கேரக்டரில் நான் நடித்து தருகிறேன் என்றும் கூறியிருந்தார்.



இந்த நிலையில் கேப்டன் மகன் சண்முக பாண்டியன் தற்போது ’படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அன்பு என்பவர் இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஐந்து நிமிடம் வரும் ஒரு முக்கிய கேரக்டர் இருந்ததாகவும் இந்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இது குறித்து இயக்குனர் அன்பு கூறியபோது ’ஐந்து நிமிட கேரக்டரில் நடிக்க ராகவா லாரன்ஸ் அவர்களிடம் தயங்கி கூறிய போது நான் தாராளமாக நடித்து தருகிறேன், தம்பி சண்முக பாண்டியனுக்காக கண்டிப்பாக நடித்து தருகிறேன் என்று கூறிய ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என்றும் நீங்கள் சம்பளம் கொடுக்க விருப்பப்பட்டால் ஒரு நான்கு ஏழை குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து ’படைத்தலைவன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் காட்சியின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் இணைந்ததை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement