• Dec 26 2024

உதயசூரியனை பார்த்தவுடன் கடலில் முங்கி எழுந்த ரக்சிதா மகாலட்சுமி.. வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் கிளாமர் உட்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளதை அடுத்து அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படம், வீடியோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் திரையுலகில் பிசியாக இருந்தாலும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கிருந்து அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் சற்று முன் அவர்   கடலின் அருகில் சூரிய உதயத்தை பார்க்கும் புகைப்படம், வீடியோவை பதிவு செய்துள்ள ரக்சிதா மகாலட்சுமி அதன்பின் கடல் நீரில் மூழ்கி குளித்து எழுந்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் ரக்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் 'ரங்கநாயகிஎன்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜக்கேஷ் என்ற அரசியல்வாதி நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர்மெய் நிகரே’ ’ஃபயர்உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருடைய மார்க்கெட் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement