• Dec 26 2024

'ரேசன் இல்ல சாமி.. வாங்கி தாங்க சாமி..' நரிக்குறவர பெண்ணின் துயர் துடைப்பாரா தவெக கட்சி தலைவர்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தற்போது தனது அரசியல் பயணத்தை சிறப்பாக கொண்டு நகர்த்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடிகட்டி பறந்த விஜய், சினிமா துறையில் இருக்கும்போதே அரசியலில் நுழைவதற்கான சில களப்பணிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வந்தார்.

அதன்படி மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பது, நிவாரண நிதி வழங்குவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என நேரிலேயே  களம் இறங்கி தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.


இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயருடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின் அடுத்தடுத்து தனது கட்சி சார்ந்த அறிவிப்புகளையும் செயற்பாடுகளையும் மும்முரமாக செயற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் அறிமுகப்படுத்திய உறுப்பினர் சேர்க்கை செயலியின் மூலமாக கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்கள் அதில் இணைந்துள்ளார்கள். இவ்வாறு நடிகர் விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சி மேலும் மேலும் விரிவாகிக் கொண்டு செல்கிறது.


அது மட்டுமின்றி தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஒரு மாதத்திலேயே மக்களுக்காக, விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் படி ஏழு வீடுகள் கட்டப்பட்டு பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நரிக்குறவர் பெண் ஒருவர், 'எங்களுக்கு ரேசன் இல்ல சாமி எங்களுக்கு ரேசன் வாங்கி தாங்க' என தமிழக வெற்றிக்கழக தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நரிக்குறவர மக்களுக்கு எந்த வகையில் உதவ போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement