• Dec 25 2024

காதலை எந்த மொழியிலயும் சொல்லலாம், ஆனால் உண்மையா சொல்லணும்: ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’ டிரைலர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தில் அமைந்துள்ள அழகான காதல் காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜிவி பிரகாஷ் சேரும் நிலையில் அங்குள்ள மலையாள பெண்ணை அவர் காதலிக்கிறார். அந்த பெண்ணிடம் காதலை சொல்ல ஜிவி பிரகாஷ் தயங்கி கொண்டிருக்கும் நிலையில், உனக்கு பிடித்த பெண்ணிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் காதலை சொல்லலாம், ஆனால் உண்மையாக சொல்ல வேண்டும் என்று அவரது நண்பர்கள் அறிவுரை கூற அந்த பெண்ணிடம் தனது காதலை கூறுகிறார்.

இதனை அடுத்து ஒரு மலையாள பெண்ணை தமிழன் காதலிப்பதா? என அங்குள்ள மலையாளவாசிகள் ஜிவி பிரகாஷை அடித்து நொறுக்க அதன் பின் ஏற்படும் பிரச்சனைகள் அந்த பிரச்சினைகளை எப்படி ஜிவி பிரகாஷ் சந்திக்கிறார் என்பதுதான் ‘ரிபெல்’ படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

முதல் பாதி இனிமையான காதல் கதையாகவும் இரண்டாவது பாதி அதிரடி ஆக்சன் கதையாகவும் அமைந்துள்ள இந்த திரைப்படம் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பிரேமலு’ என்ற படத்தின் நாயகி மமிதா பாஜூ நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஆதித்ய பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இந்த படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement