விஜய் டிவியில் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியார்கள் மட்டுமே எஞ்சி உள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கடந்த இரண்டு வாரங்களாகவே டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. ஆனால் இந்த வாரமும் அதே போல நடக்கும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். எனினும் விஜய் சேதுபதி ஒருவரை மட்டும்தான் எலிமினேட் செய்துள்ளார்.
d_i_a
கடந்த வாரம் இடம் பெற்ற நாமினேசன் லிஸ்டில் ஜெஃப்ரி, விஷாலைத் தவிர ஏனையவர்கள் நாமினேட் ஆனார்கள். அதில் கம்மியான வாக்குகளை பெற்ற மஞ்சரி, ராஜன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் டேஞ்சர் ஷோனில் காணப்பட்டனர்.
இவர்களுள் இதுவரையில் சைலண்டாக விளையாடி வந்த ரஞ்சித் தான் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். இந்த சீசனில் அதிக வயதுடைய போட்டியாளராக ரஞ்சித் காணப்பட்டார். இறுதியில் எல்லோரும் அவரை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் வாங்கிய சம்பள விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளமாக ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் மொத்தமாக 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ளார்.
அதன்படி ரஞ்சித்துக்கு மொத்த சம்பளமாக 38 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணுபவர்க்கு கூட இவ்வளவு தொகை கிடைக்காது என கூறப்படுகின்றது. பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் 50 லட்சம் வழங்கப்படும். ஆனால் அதில் அவர்களுக்கு இறுதியாக 30 லட்சம் தான் கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!