• Sep 17 2026

குட் நியூஸ் சொன்ன தீபிகா படுகோண்! குழந்தை பிறந்த குஷியில் ரன்வீர் சிங்! குவியும் வாழ்த்துக்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோண் - ரன்வீர் சிங் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திரையுலக சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.


நடிகை தீபிகா படுகோண் கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கர்ப்பமாக இருந்த நிலையிலும், கல்கி படத்தில் நடித்து கொடுத்தார்.


இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை தீபிகா படுகோணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement