• Apr 28 2026

தமிழ் சினிமாவில் 28 வருடங்களின் பின்பு ...! ரீ-எண்ட்ரி கொடுக்கும் ரவீனா டாண்டன்...!

Roshika / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவை  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரவீனா டாண்டன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 'லாயர்'  திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது .


ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்"லாயர்" தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தில்  ரவீனா டாண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப்படும் என்றும் இதுவரையும் திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக அமையும் என  படக்குழு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. 


இது தமிழ் சினிமாவில் மீண்டும்  அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தகவல் அறிந்த ரவீனா டாண்டன் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திகைத்துள்ளதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement