• Apr 28 2026

சரவணனின் அதிரடி முடிவு.. மிரண்டு போன அஞ்சலி.! உண்மையை உடைத்த முத்துவேல்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, முத்துவேல் காந்திமதியைப் பார்த்து என்ன ஜோசிச்சுக் கொண்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட வடிவு அத்தை கதிர் சொன்னதையே நினைச்சுப் பார்க்கிறா என்று முத்துவேலுக்குச் சொல்லுறார். பின் காந்திமதி அவன் அப்படிப்பட்ட பையன் கிடையாது ஆனால் ஏன் அப்படி நடந்துகிட்டான் என்று எனக்குத் தெரியல என்று சொல்லுறார். 

அதைக் கேட்ட முத்துவேல் காந்திமதியைப் பார்த்து கதிருக்கு உன்மேல கோபம் எல்லாம் கிடையாது எனக்காகத் தான் அவன் உன்னை எங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சான் என்று சொல்லுறார். மேலும், நான் தான் இந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன் என்று சொல்லுறார் முத்துவேல். 


அதனைத் தொடர்ந்து காந்திமதி முத்துவேல் பேச்சில பழைய கம்பீரமே இல்ல என்ன நடந்த என்று வடிவுகிட்ட கேட்கிறார். அதுக்கு வடிவு எனக்கும் தெரியல கொஞ்ச நாளாகவே அவர் அப்படித் தான் இருக்கிறாரு என்று சொல்லுறார். மறுபக்கம் கோமதி சரவணன் இண்டைக்கு கோர்ட்டில மனசு மாறுவானா என்று செந்தில் கிட்ட கேட்கிறார். அதுக்கு செந்தில் அண்ணா என்ன செய்யுதோ தெரியல என்று சொல்லுறார். 

அதனைத் தொடர்ந்து பாக்கியம் மயிலைப் பார்த்து இண்டைக்கு என்ன நடந்தாலும் விவாகரத்துக்கு மட்டும் சம்மதிக்க கூடாது என்கிறார். மேலும், என்ர பிள்ளைக்கு அப்பா வேணும் என்று சொல்லு என்கிறார் பாக்கியம். அதுக்கு மயில் எதுவுமே கதைக்காமல் கோர்டுக்கு போவோம் என்று சொல்லுறார். பின் சரவணன் அஞ்சலி கிட்ட இனிமேல் மயில் கூட சேர்ந்து வாழுறதை கற்பனை கூட பண்ண முடியாது என்கிறார். மேலும், நான் உன்னை விட்டிட்டு போக மாட்டேன் என்கிறார் சரவணன். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement