தனுஷ் தற்போது தனது பிஸியான படப்பணிகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்ததாக எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னிடம் ஏற்கனவே பல முக்கியமான படங்கள் வரிசையாக இருப்பதாக தெரிவித்தார்.

முதலில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதன் பின்னர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார். இதற்கிடையில் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தையும் முடிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருக்கும் “வடசென்னை 2” படத்தையும் முடிக்க வேண்டியுள்ளது என்பதால், தனது கால அட்டவணை மிகவும் நிரம்பியுள்ளதாக கூறினார்.
இந்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்றும், அந்த காலக்கட்டத்தில் இயக்குநராக திரும்புவது குறித்து தற்போது யோசிக்கவில்லை என்றும் தனுஷ் தெளிவாக கூறியுள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருந்தாலும், நடிகராக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்த விரும்பும் தனுஷ், தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை கவரப் போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
Listen News!