• Apr 28 2026

டெக்னாலஜி காதல் சோலி முடிஞ்சு..! LIK படத்தின் மொத்த வசூல் விபரம்..!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில் வசூலில் மந்தநிலையை சந்தித்து வருகிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த அறிவியல் காதல் நகைச்சுவை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, க்ரிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய தகவல்களின் படி, இப்படத்தின் தமிழ் பதிப்பு 18வது நாளில் ரூ.27 லட்சம் வசூல் செய்துள்ளது. கடந்த சில நாட்களின் வசூல் நிலவரத்தை பார்க்கும்போது, படம் சிறிய ஏற்றத் தாழ்வுகளுடன் சென்றாலும், மொத்தத்தில் குறைவாகும் போக்கு தென்படுகிறது.

11வது நாளில் ரூ.55 லட்சம் வசூலித்த படம், 12வது நாளில் ரூ.57 லட்சமாக உயர்ந்தது. 13வது நாளில் ரூ.60 லட்சம் வரை சென்ற வசூல், அதன் பின்னர் மீண்டும் குறையத் தொடங்கியது.


இதுவரை, ‘LIK’ திரைப்படம் தமிழ் பதிப்பில் மட்டும் ரூ.34.82 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் மொத்த நிகர வசூல் ரூ.42.09 கோடியாக உள்ளது. உள்நாட்டு மொத்த வசூல் ரூ.48.48 கோடி ஆகவும், உலகளவில் ரூ.59.58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு சந்தைகளில் மட்டும் ரூ.11.10 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

2040ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்த படம், ‘LIK’ என்ற டேட்டிங் ஆப் மூலம் இயக்கப்படும் உறவுகளை மையமாகக் கொண்டது. இயல்பான காதலில் நம்பிக்கை கொண்ட ஒருவரும், தொழில்நுட்பத்தை நம்பும் பெண்ணும் இடையே உருவாகும் கருத்து மோதலே கதையின் மையம்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டியில் விக்னேஷ் சிவன், “நார்மல் பீப்பிள்” குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். “நாங்கள் ‘நாங்கள் சாதாரண மக்கள் அல்ல, இன்ஃப்ளூயன்சர்கள்’ என்று கூறியதை சிலர் தவறாக மாற்றி பரப்பினர். உண்மையை மாற்றி வைரலாக்க முயன்றுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement