• Jun 15 2026

சின்ன மருமகள் நடிகருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா.? வீட்டுல நடந்த விஷேச போட்டோ வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

‘சின்ன மருமகள்’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றவர் நடிகர் நவீன் குமார். இயல்பான மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் அவரது திறமை, இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த தொடர் தொடங்கியதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப சூழ்நிலையால் ஒரு கிராமத்து மாணவி பழமைவாதமான செல்வந்த குடும்பத்தில் மருமகளாக செல்வதும், அங்கே அவள் எதிர்கொள்ளும் சவால்களும், புதிய எண்ணங்களுக்கும் பாரம்பரியத்திற்கும் இடையிலான மோதல்களும் கதையின் மையமாக உள்ளன.


நவீன் குமாருடன் கதாநாயகியாக நடிகை ஸ்வேதா இணைந்து நடித்துள்ளார். இவர்களின் திரை ஜோடி இயல்பாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்ததால், பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நவீன் குமார் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement