• Apr 28 2026

பாலிவுட்டின் நாலு தலைமுறை நடிகர் பாரத் கபூர் காலமானார்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

1972ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான பாரத் கபூர், துணை வேடங்கள், வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் கவர்ந்தார். 

மேலும் இவர் நூரி, ராம் பல்ராம், லவ் ஸ்டோரி, சத்யமேவ் ஜெயதே உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்ற திரைத்துறை  நடிகர் பாரத் கபூர் (வயது 80), நேற்று (ஏப்ரல் 27) பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். 


உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது நண்பரும் நடிகருமான அவ்தார் கில் இந்த சோகமான தகவலை உறுதிப்படுத்தினார். இவரின் இறுதிச் சடங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

பாலிவுட்டிற்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக சேவை செய்த பாரத் கபூரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த துயர் செய்தியை கேட்டு கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

Advertisement

Advertisement